ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பிப்ரவரி 22சனியன்று பிற்பகல் 2 மணிக்கு பணி நியமன கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது
ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பெற்று இணையான பாடத்திட்டம் உள்ளிட்ட பிரச்சனைகள் காராணமாக சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின்னரும் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை.இவ்வாறு பாதிக்கப்பட்ட பலர் நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்றனர். அவ்வாறு உத்தரவு பெற்றவர்களுக்கு கடந்த சில நாட்களாக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் ஏற்கனவே பணி நியமன ஆணை வழங்கியுள்ளது. என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற சான்றிதல் சரிபார்ப்பில் கலந்துகொண்ட TET 2012 தேர்வர்களில் தகுதிவாய்ந்த அனைவருக்கும் பிப்ரவரி 22 சனியன்று பிற்பகல் 2 மணிக்கு கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு,மற்றும் அனைத்து கல்விச்சான்றிதலுடன் எதேனும் ஒரு முதன்மைக் கல்வி அலுவலகதில் கலந்துகொள்ளலாம் நியமன ஆணை பெறுபவர்கள் முதல்வர் பிறந்த நாளான 24.02.14 ல் சேருவர்.எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக