தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. நாமக்கல் மாவட்டம்
ராசிபுரத்தில் தனியார் பள்ளி தேர்வு மையத்தில்உள்ள ஒரு அறையில் கண்காணிப்பாளராக
பணிபுரிந்த ஒருவர், தேர்வெழுதிக் கொண்டிருந்த ஒரு மாணவியின் முதுகில் 2
முறை தட்டி கொடுத்ததாகவும். சிறிது நேரம் கழித்து, தனது கையில் என்னை பிடித்திருக்கிறதா என எழுதி காட்டி, மாணவியிடம் சைகை தெரிவித்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
தேர்வு முடிந்த பிறகு மாணவி,தனது பெற்றோரிடம் இது பற்றி கூறி, கண்ணீர்
விட்டு அழுதுள்ளார். உடனடியாக, மாணவியை அழைத்து கொண்டு பள்ளிக்கு சென்ற
பெற்றோர், அந்த தேர்வு மைய அதிகாரியிடம்புகார் கூறியுள்ளனர்.இதையடுத்து அவர்,
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். அதை தொடர்ந்து அந்தஆசிரியரை நாமக்கல் அழைத்து வந்து, அவரிடம்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குமார்,நேற்றிரவு விசாரணை நடத்தினார்.
இதுகுறித்து கலெக்டர் தட்சிணாமூர்த்தி கூறியதாவது: ராசிபுரம் தனியார்பள்ளி தேர்வு மையத்தில், பணியாற்றிய அறை கண்காணிப்பாளர் ஒருவர், மாணவிக்கு விடைத்தாள் கொடுக்கும் போது அவரது கை தவறுதலாக மாணவியின் மீது பட்டுள்ளது. நடந்தசம்பவத்துக்கு அறை கண்காணிப்பாளர் தேர்வு அறையிலேயே வருத்தம் தெரிவித்துள்ளார். இருப்பினும்மையத்தில் நடந்த பிரச்னை என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி, தவறு நடந்திருந்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக