சேவை குறைபாட்டுடன் செயல்பட்ட மருத்துவமனை :நஷ்ட ஈடு வழங்க கோர்ட் உத்தரவு
கோவை, வடவள்ளியைச் சேர்ந்தவர், வசந்தா, 52; ஒற்றை தலைவலியால்
அவதிப்பட்டு வந்தார். தொண்டாமுத்தூரில் உள்ள 'வாசன் ஐ கேர்' கண் மருத்துவமனை டாக்டர்கள்,'மல்டி போக்கல் லென்ஸ்' பொருத்த வேண்டும் என தெரிவித்தனர். 2012, நவ., 8 ம்தேதி வலது கண்ணிலும், நவ., 10ம் தேதி இடது கண்ணிலும், வசந்தாவுக்கு ஆபரேஷன்
செய்யப்பட்டது. ஆபரேஷனுக்கு பிறகு வீடு திரும்பிய வசந்தாவுக்கு, மீண்டும் தலைவலி வந்தது. பாதிக்கப்பட்ட வசந்தா,வேறு மருத்துவமனையில் பரிசோதித்து பார்த்த போது, அவரது இடது கண்ணில், 'மல்டி போக்கல் லென்சு'வைப்பதற்கு பதிலாக, 'ஒற்றை போக்கல் லென்ஸ்' பொருத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது. வசந்தா,கோவை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த, நீதிமன்ற தலைவர் தண்டபாணி,
'சேவை குறைபாட்டுடன் செயல்பட்ட , வாசன் ஐ கேர் மருத்துவமனை, பாதிக்கப்பட்ட வசந்தாவுக்கு, இழப்பீடாக, 3லட்சம் ரூபாய், மருத்துவ செலவு தொகை, 1 லட்சம் ரூபாய், வழக்கு செலவு, 1,000 ரூபாய் வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக