திங்கள், 14 ஏப்ரல், 2014

முயற்சி, ஈடுபாடு இருந்தால் வெற்றி

முயற்சி, ஈடுபாடு இருந்தால் வெற்றி
பிளஸ் 2 முடித்த மாணவர்களின்உயர்கல்விக்கு ஆலோசனை வழங்கும், "தினமலர்'
வழிகாட்டி நிகழ்ச்சி, திருப்பூர் வித்யா கார்த்திக்மண்டபத்தில், கடந்த இரு நாட்களாக நடந்தது.
தகவல் தொழில்நுட்ப துறையின் தற்போதைய போக்கு என்ற தலைப்பில், "டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ்'ஆலோசகர் கணேஷ் மகாதேவன் பேசியதாவது:கற்பனை திறனுக்கு வடிவம் தர வேண்டும். அதற்கு முயற்சி அவசியம். ஐ.டி., துறை, கடந்த 20 ஆண்டுகளில்,மக்கள் மத்தியில் அதிக பிரபலமானது. அதிகளவில் ஊழியர் பணியாற்றும் துறையாக உள்ளது. தற்போது 31லட்சம் பேர் வேலை செய்கின்றனர்.
ஆண்டுக்கு மூன்று லட்சம் முதல் நான்கு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு தருகிறது.
கடந்த மார்ச் 31 வரை, ஐ.டி., துறையில் ஆறு லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது. வரும் 2020ல், 18 லட்சம் கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன், 600 கோடி ரூபாயாக இருந்த வர்த்தகம், இன்று ஆறு லட்சம் கோடியாக இருக்கும்போது, 18 லட்சம் கோடி ரூபாய்இலக்கை எட்டுவது சாத்தியம்.

ஏற்றம், இறக்கம் இல்லாத துறை எதுவும் இல்லை.எல்லா துறையிலும்,"சாப்ட்வேர்' வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. ரயில்வே ஸ்டேஷன், வங்கி, தபால் துறை, பஸ் போக்குவரத்து,
விமான பயணம் உட்பட அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில், சாப்ட்வேர் தொழில்நுட்பம் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. மொபைல் போனிலேயே சகல வசதிகளையும்,
மக்கள் பெற்றுக் கொண்டிருக்கின்றனர்
.எந்த பாடப்பிரிவு படித்திருந்தாலும், ஐ.டி., துறை வேலைவாய்ப்பு அளிக்கிறது. இத்துறையில் பணியாற்றஆங்கிலத்தில் தேர்ச்சி அவசியம். ஆங்கிலத்தில் பிழையின்றி பேசவும், பிறர் பேசுவதை தெளிவாகபுரிந்து கொள்வதும் முக்கியம். ஆங்கிலம் தெரியாவிட்டால், ஐ.டி., துறையில் தாக்குப்பிடிப்பது கஷ்டம்.
உலகம் சார்ந்த பொது அறிவும் முக்கியம். வாழ்க்கைக்கு எது தேவையாக இருக்கிறதோ, அதை கற்றுக்கொள்வதற்கு நேரத்தை ஒதுக்க வேண்டும்.பெரும்பாலானவர்களிடம், தங்களது எதிர்காலம் குறித்ததிட்டமிடல் இல்லை; வாழ்க்கை பற்றிய தெளிவு இல்லை. எந்த செயலிலும் திட்டமிடல் இல்லையென்றால், தோல்வியில் முடியும். முயற்சியும், ஈடுபாடும் இருந்தால் மட்டுமே, வாழ்க்கையில் ஜெயிக்கமுடியும்.
இவ்வாறு, கணேஷ் மகாதேவன் பேசினார்.


Sent from my iPad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக