திங்கள், 14 ஏப்ரல், 2014

படைப்பாற்றல் இருந்தால் போதும்; உயர்ந்த நிலை அடையலாம்

பிளஸ் 2 முடித்த மாணவர்களின்உயர்கல்விக்கு ஆலோசனை வழங்கும், "தினமலர்'
வழிகாட்டி நிகழ்ச்சி, திருப்பூர் வித்யா கார்த்திக்மண்டபத்தில், கடந்த இரு நாட்களாக நடந்தது. டாக்டர்எம்.ஜி.ஆர்., பல்கலை, நேரு குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன், டாக்டர் என்.ஜி.பி., எஜூகேஷனல்இன்ஸ்டிடியூஷன், ஜான்சன் இன்ஸ்டிடியூஷன், ஸ்காட்,
ஆர்.வி.எஸ்., குரூப், பி.ஏ., பொறியியல்கல்லூரி இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தின. நேற்று, கல்வியாளர்கள் ஜெயபிரகாஷ்காந்தி, நடிகர் அஜய்ரத்தினம், திருநாவுக்கரசு, ஆடிட்டர் சரவண பிரசாத், கணேஷ் மகாதேவன், நம்பியார், வணங்காமுடி ஆகியோர்
பேசினர்.
அனிமேஷன் மற்றும் கிராபிக் டிசைனிங் படிப்பு குறித்து,மதுரை சுப்புலட்சுமி லட்சுமிபதி கல்லூரி உதவி பேராசிரியர் திருநாவுக்கரசு பேசியதாவது:
அன்றாட வாழ்வில், அனிமேஷன் துறை பங்களிப்பு மிகவும் அவசியமாகி விட்டது. புதிய வீடு கட்டும்போது,அதற்கான வரைபடங்களை, கிராபிக் டிசைனிங் வல்லுனர்களே, இன்ஜினியர் களுக்கு தெளிவாக வடிவமைத்துக்கொடுக்கின்றனர். மருத்துவத்துறையிலும், டிசைனிங் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.இத்துறையை தேர்ந்தெடுக்க, கற்பனைத்திறன் மட்டும் இருந்தால் போதும். இயல்பாகவே ஒவ்வொருவருக்குள்ளும் கற்பனைத்திறன் மறைந்திருக்கிறது.
திருப்பூரில், ஆடை வடிவமைப்புக்கு ஏராளமான டிசைனர்கள் தேவைப்படுகின்றனர். போட்டோஷாப்,இல்லுஸ்ட்ரேட்டர் போன்ற 2டி சாப்ட்வேர்கள் படித்தாலே, வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.டாக்டர், இன்ஜினியர் போன்ற படிப்புகளை தேர்ந்தெடுத்தால் மட்டுமே, சமூகத்தில் மரியாதை எனநினைக்கின்றனர். கிராபிக் டிசைனிங் துறையை பொறுத்தவரை, நல்ல சம்பளத்தோடு கூடிய புகழையும் கொடுக்கும். இப்படிப்புகளை, டிப்ளமோ போன்ற குறுகிய கால படிப்புகளாக படிக்கக்கூடாது. சிறந்த கல்லூரியை தேர்வுசெய்து படித்தால், எளிதில் வேலைவாய்ப்பு பெற முடியும். இன்றைய சினிமாவில், கிராபிக்டிசைனிங் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அனிமேஷன் துறையை படித்து விட்டால் மட்டும்உடனே வேலை கிடைத்து விடும் என்று நினைக்கக்கூடாது. உங்களது கற்பனை திறன், படைப்பாற்றலுக்கு ஏற்ப,உயர்ந்த நிலையை அடைய முடியும்.இவ்வாறு, அவர் பேசினார்


Sent from my iPad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக