ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

தகவல் வழங்குவதில் தாமதம்: பொதுத்தகவல் அலுவலர் விளக்கமளிக்க நடவடிக்கை

'ஒரு நிறுவன அல்லது குழுமத்தின் தலைவர் தகவல் கோரி, மனு செய்ய முடியாது,'
என்ற பொதுத் தகவல் அலுவலர், மேல்முறையீட்டு அலுவலரின் பதிலை, ஏற்க முடியாது.
ஓராண்டு தாமதமாகியும் முழுமையான தகவல் அளிக்காத, பேரூராட்சி பொதுத் தகவல்
அலுவலர் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது? என்பதற்கு, விளக்கமளிக்க, மாநிலதகவல் ஆணையம் உத்தரவிட்டது. மதுரை எஸ்.ஆர்.எஸ்., டிரேடர்ஸ் உரிமையாளர் சுப்பிரமணியன். இவர், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ்,விபரங்கள் கோரி, விருதுநகர் சுந்தரபாண்டியம் பேரூராட்சி பொதுத் தகவல் அலுவலருக்கு விண்ணப்பித்தார்.
அதில், '2012 ஏப்ரல் முதல் நவ.,15 வரை தெரு விளக்கு, குடிநீர், பிளிச்சிங் பவுடர், பினாயில்,
சுண்ணாம்புத்தூள், கொசுமருந்து இருப்பு, பொருட்களின் விலை, 3 மாதங்களுக்கு தேவையானபொருட்களை வாங்குவீர்களா அல்லது மாதம் தோறும் பில் போட்டு வாங்குவீர்களா?' என்பன போன்றதகவல்களை கோரினார்
பொதுத் தகவல் அலுவலர், ''மனுதாரர், நிறுவனத்தை சேர்ந்தவர் என்பதால், சட்டப்படி தகவல் தர இயலாது,'' என, மறுத்தார். மனுதாரர், முதல் மேல்முறையீட்டு அலுவலரிடம்
விண்ணப்பித்தார். அவர், ''ஒரு நிறுவன அல்லது குழுமத்தின் தலைவர் அல்லது வேறு எந்த வகையிலும்உரிமையுள்ளவர் என்ற முறையில், தான் சார்ந்திருக்கும் பதவி அடிப்படையில் தகவல் கோரி, மனு செய்ய முடியாது,'' என நிராகரித்தார்.
இதை எதிர்த்து, மாநில தகவல் ஆணையத்தில், சுப்பிரமணியன்மேல்முறையீடு செய்தார். இதுகுறித்து, மாநில தகவல் கமிஷனர் கிறிஸ்டோபர் நெல்சன் உத்தரவு: மனுதாரர் ஆஜராகவில்லை.விதிகள்படி, மனுதாரர் ஆஜராவது கட்டாயம். பொதுத் தகவல் அலுவலர் சிவகுமார் (செயல் அலுவலர்,சுந்தரபாண்டியம் பேரூராட்சி) ஆஜரானார். பொதுத் தகவல் அலுவலர், மேல்முறையீட்டு அலுவலரின் பதிலை,இந்த ஆணையம் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. சில கேள்விகளுக்கு, சரியான தகவல் வழங்கவில்லை. சில
கேள்விகளுக்கு பொதுவான தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளது. பதிவேட்டு நகல் வழங்க கட்டணம் 235 ரூபாய்கோரியது, விதிகளுக்கு முரணானது. மனுதாரர், இந்தியக் குடிமகன் என்பதால், அவருக்கு தகவல் அளிக்க வேண்டும். கேள்வி 4, 9, 11 க்கு சரியான, முழுமையான தகவல், இலவசமாக வழங்க வேண்டும். ஓராண்டு, 2மாதங்கள் தாமதமாக, முழுமையான தகவல்கள் வழங்காத, பொதுத் தகவல் அலுவலர் மீது, ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சிபாரிசு செய்யக்கூடாது? என்பதற்கு விளக்கமளிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக