ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

'தமிழ் வழியில் படித்தவர்களும் ஐ.டி., துறையில் சாதிக்கலாம்'

'தினமலர் வழிகாட்டி' நிகழ்ச்சியில், 'ஐ.டி., துறைகளின் எதிர்காலம்' என்ற தலைப்பில்,
டி.சி.எஸ்., துணைத் தலைவர், ஹேமா கோபால், பேசியதாவது: நகர்ப்புறங்களில் வசிப்பவர்,
ஆரம்ப பள்ளியில் இருந்தே, ஆங்கில வழிக்கல்வியில் படித்தவர், நுனிநாக்கு ஆங்கிலம் பேசுபவர்மட்டுமே, ஐ.டி., துறைகளில் வேலை பார்க்க முடியும் என, பலரும் நினைத்துக்
கொண்டிருக்கின்றனர். இது, முற்றிலும் தவறு. தமிழ் வழியில் படித்தவரும், ஐ.டி., துறையில்
சாதிக்கலாம். ஆனால், தேவையான தகுதிகள் வேண்டும். முன், சென்னையில் மட்டுமே காலூன்றிய, ஐ.டி., துறை, தற்போது, கோவை, திருநெல்வேலி, ஓசூர், மதுரை போன்ற
பகுதிகளிலும் பரவியுள்ளது. தமிழக அரசின் அனைத்து சேவைகளும், கணினி வழி நடக்க வேண்டும் என,அரசு பல்வேறு விதங்களில் முயற்சித்து வருகிறது. அதனால், பல்வேறு தளங்களில், ஐ.டி., துறைகளில் வாய்ப்பு,பிரகாசமாக உள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக