திங்கள், 2 மார்ச், 2015

TRB PG TAMIL 2012-13 :பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்டோர்- அரசு சார்பில் மறு ஆய்வு மனுக்கள் தள்ளுபடி

TRB PG TAMIL 2012-13 :பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்டோர்- அரசு சார்பில் மறு ஆய்வு வழக்கு இன்று (02.03.14 திங்களன்று) விசாரணைக்கு வந்தது

சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் ஆண்டனி கிளாரா, விஜயலட்சுமி ஆகியோருக்கு 21 கருணை மதிப்பெண்கள் வழங்கி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்டோர் சென்னை உயர்நீதி மன்றத்திலும் வழக்கு தொடுத்தனர்.

நீதியரசர் சுப்பையா முன் விசாரணைக்கு வந்த பல்வேறு வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் ஆண்டனி கிளாரா, விஜயலட்சுமி ஆகியோருக்கு 21 கருணைமதிப்பெண்கள் வழங்கி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது போன்று மனுதாரர்களுக்கும் 21 கருணை மதிப்பெண்கள் வழங்கி உத்தரவிட்டிருந்தார்.

அதனை எதிர்து அரசு சார்பில் மறு ஆய்வு மனுக்களும், மனுதாரர் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றின் விசாரணை இன்று (02.03.14 திங்களன்று) விசாரணைக்கு வந்தது.

அரசின் சார்பில் ஆஜரான அட்வகட் ஜெனரல் சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையின் இடைக்கால
தீர்ப்பின் அடிப்படையில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டு புதிய தரவரிசைப்பட்டியல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டுள்ளதாகவும்.அதன் இறுதித்தீர்ப்புக்கு உட்பட்டு இவ்வழக்குகள் மீது முடிவெடுக்கப்படும் என பதில் மனு தாக்கல் செய்தார்.
நீதியரசர் சுப்பையா அதன் அடிப்படையில் அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுக்களை தள்ளுபடி செய்தும் ,மனுதாரர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை முடித்து வைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக