செவ்வாய், 23 ஜூன், 2015

அரசுப் பள்ளி மாணவர்கள் 5 பேருக்கு விருது!v


கூடுவாஞ்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் ஏழை மாணவர்களுக்கு இலவச மாக கணினிப் பயிற்சி அளித்த அரசுப் பள்ளி மாணவர்கள் 5 பேருக்கு விருது கிடைத்துள்ளது. தனியார் நிறுவனம் சார்பில் சிறந்த சமுதாய தொண்டுக்கான விருதை பெற்ற 5 மாணவர்களையும் மாவட்ட ஆட்சியர் நேற்று நேரில் அழைத்து கவுரவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த அஸ்தினாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில், 10-ம் வகுப்பு படிக்கும் பரத்குமார், பாலாஜி, அபுதாகீர், அருண்குமார், மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் ஆகாஷ் ஆகிய மாணவர்கள் கணினி அறிவில் சிறந்து விளங்குகின்றனர். இந் நிலையில், இந்த 5 மாணவர்களும் கூடுவாஞ்சேரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு வீடு, வீடாக சென்று இலவசமாக கணினி பயிற்சி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள DHFL Pramerica Life Insurance Co. Ltd. என்ற நிறுவனம் சிறந்த சமுதாய தொண்டுக்கான விருதை இந்த மாணவர்களுக்கு வழங்கியது. 5 மாணவர்களும், கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி சென்று விருதை பெற்றுக் கொண்டனர். இந்த அரசுப் பள்ளி மாணவர்களை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் சண்முகம் நேற்று கவுரவித்து பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

இதுகுறித்து, மாணவர்களை ஊக்கப்படுத்தி வரும் ஆசிரியை சித்ரா கூறியதாவது: மாணவர்கள் 5 பேரும் இயற்கையாகவே கணினிக் கல்வி கற்பதில் ஆர்வமாக இருந் தனர். இதனால், மாணவர்களை ஊக்கப்படுத்தி பள்ளி சார்பில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. இதில் கணினிக் கல்வியில் சிறந்தத் தேர்ச்சி பெற்றனர்.

இதைத் தொடர்ந்து, கிராமப்புற மாணவர்களுக்கு கணினிக் கற்பிக்க ஐந்து பேரும் விருப்பம் தெரிவித்தனர். கிராமப்புறங்க ளுக்கே சென்று ஏழை குழந்தை கள் மற்றும் மாணவர்களுக்கு இலவசமாக கணினிப் பயிற்சி அளித்து வருகின்றனர். இந்த சமுதாய தொண்டு குறித்து டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மாணவர்களின் சார்பில் பதிவு செய்யப்பட்டது. சிறந்த சமுதாய தொண்டு புரிந்ததற்காக 2-ம் இடம் வழங்கி அந்நிறுவனம் விருது வழங்கியது. விருது பெற்ற மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியதால், உடனடியாக மாவட்ட ஆட்சியரை சந்திக்க முடிய வில்லை என்றார்.