வியாழன், 24 ஏப்ரல், 2014

குரூப்–2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு 3–வது கட்ட கலந்தாய்வு 28–ந்தேதி நடக்கிறது

2012–ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற குரூப்–2 (நேர்முகத்தேர்வு அல்லாத) தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு 3–வது கட்ட கலந்தாய்வு 28– ந்தேதி சென்னை பிராட்வே பஸ்நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெற உள்ளது. பதிவெண்கள் அடங்கிய தற்காலிக பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பாணை விரைவஞ்சல் மூலம் தனியாக அனுப்பப்பட்டுள்ளது. மேற்கூறிய விவரங்கள் அடங்கிய ''கலந்தாய்விற்கான அழைப்புக்கடிதத்தினை" தேர்வாணைய இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வி.ஷோபனா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக