செவ்வாய், 22 ஏப்ரல், 2014

TRB PG TAMIL/ TET/ TNPSC:திருக்குறளைப்பற்றி சில அரிய தகவல்கள் 3

* "ஒருமையுள் ஆமைபோ லைந்தடக்க லாற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து" - என்ற குறளில் 1.5.7 என்ற பகா எண்கள்
Nகுறிபிடப்பட்டுள்ளன.

* அன்னம்,கூகை (ஆந்தை), கொக்கு, காக்கை, புள்(பறவை), மயில், ஆமை,
கயல் மீன். மீன் (விண்மீன்), முதலை, நத்தம்(சங்கு), பாம்பு, நாகம்,
என்பிழாது(புழு) ஆகியன இடம் பெற்றுள்ளன.

* பலோடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர் (112) - என்ற குறளில் பால், தேன், நீர் என்ற மூன்று நீர்மங்கள் இடம் பெற்றுள்ளன.

* "பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு" - என்ற குறளில் ஒரே சொல் 6 முறை இடம்பெற்றுள்ளது.

* ஒரே சொல் 5 முறை 5 குறட்பாக்களிலும், ஒரே சொல் 4 முறை 22 குறட்பாக்களிலும், ஒறே சொல் 3 முறை 27 குறட்பாக்களிலும் இடம் பெற்றுள்ளன.

* "துணை எழுத்தே இல்லாத குறள் "கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக". (391)

* திருக்குறளில் தமிழ் என்ற சொல் இடம் பெறவில்லை.

* முதன் முதலில் 1812 ஆமஆண்டு ஓலைச்சுவடியிலிருந்து அச்சிடப்பட்டதே திருக்குறளின்
முதற்பதிப்பாகும்.
.

* 1330 குறட்பாக்களில் எந்த இடத்திலும் கடவுள் என்ற சொல் இடம்
பெறவில்லை.

* திருக்குறளில் 50 பிறமொழிச் சொற்கள் இடம் பெற்றுள்ளன.


Sent from my iPad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக