வெள்ளி, 25 ஏப்ரல், 2014

இன்று நீதிமன்ற தீர்ப்பு....

பாரத முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில்தூக்கு தண்டனை கைதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன், ஆயுள்தண்டனைக் கைதிகள் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்ஆகியோரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிராகமத்திய அரசு தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல்25) தீர்ப்பு அளிக்கவுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி. சதாசிவம் தலைமையிலான முதன்மை அமர்வு இந்த மனு மீது தீர்ப்பு அளிக்கவுள்ளது. இத் தீர்ப்பை வழங்கும் நாளில்தான் தலைமை நீதிபதி பதவியில் இருந்து சதாசிவம் ஓய்வு பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டமுருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்கள் மீது தாமதமாக மத்திய அரசு முடிவு எடுத்ததாகக் கூறி, அவர்களுக்கு விதித்த தூக்குத் தண்டனையை ஆயுள் சிறைத் தண்டனையாகக்குறைத்து உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் தீர்ப்பளித்தது. அதில்,
சிறை விதிகளுக்கு உள்பட்டு ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்வது குறித்து மாநில
அரசே முடிவெடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இத் தீர்ப்பின்படி முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்பட ஏழு பேரையும்விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால், தமிழக அரசின் முடிவுக்கு ஆட்சேபம் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்மமுறையீடு செய்தது. அம் மனு மீது கடந்த மாதம்
விசாரணை நடந்த போது, ராஜீவ் கொலையாளிகள் அனைவரும்பயங்கரவாதிகள். அவர்களை மத்திய அரசு அனுமதி பெறாமல் விடுதலை செய்ய தமிழக அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என்று மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, பயங்கரவாத வழக்கு என்பதால் சிறையில் உள்ளகைதிகளை விடுதலை செய்ய மத்திய அரசிடம் கருத்தையோ, யோசனையையோ மாநில அரசு கேட்கலாம். ஆனால், மத்திய அரசின் உத்தரவின்படிதான் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற மத்தியஅரசின் வாதம் தவறு என்று தமிழக அரசு சார்பிலும், கைதிகள் சார்பிலும்வாதிடப்பட்டது. இதையடுத்து, ஒத்திவைக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு வெள்ளிக்கிழமை அளிக்கப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக