வியாழன், 24 ஏப்ரல், 2014

தர்மபுரி லோக்சபா தொகுதியில் உள்ள கோட்டூர் மலைக் கிராமத்துக்கு, ரஜினி, கமல், விஜய், அஜீத், சரத்குமார்!

தர்மபுரி லோக்சபா தொகுதியில் உள்ள கோட்டூர் மலைக் கிராமத்துக்கு, ரஜினி, கமல், விஜய், அஜீத், சரத்குமார்!
தர்மபுரி லோக்சபா தொகுதியில் உள்ள, இரண்டு மலைக் கிராமங்களுக்கு,கழுதைகள் மூலம் மின்னணு ஓட்டு இயந்திரம் உள்ளிட்டவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன்எடுத்து செல்லப்பட்டது.
இன்று நடக்கும் லோக்சபா தேர்தலை முன்னிட்டு,தர்மபுரி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, 1,615 ஓட்டு சாவடிகளுக்கும், 150லாரி உள்ளிட்ட வாகனங்கள் மூலம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தலுக்கு தேவையான உபகரணங்கள், நேற்று போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.
தர்மபுரி லோக்சபா தொகுதியில் உள்ள பென்னாகரம் சட்டசபை தொகுதியில், 320 ஓட்டு உள்ளகோட்டூர் மற்றும், 280 ஓட்டு உள்ள ஏரிமலைக்கு போதிய சாலை வசதியில்லாமல் உள்ளது. இதனால்,சட்டசபை, லோக்சபா உள்ளிட்ட தேர்தலுக்கு, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவை, தொடர்ந்து,கழுதைகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.ஓட்டுப்பதிவு முடிந்த பின் மலைக்கிராமங்களின் அடிவாரத்துக்கு, கழுதைகள் மூலம் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்படுகிறது. பின், அடிவாரத்தில் இருந்து லாரி மூலம்ஓட்டு இயந்திரங்கள், தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் உள்ள ஓட்டு எண்ணும் மையத்துக்கு பாதுகாப்பாககொண்டு வரப்பட உள்ளது.
இதேபோன்று, இன்று நடக்கும் லோக்சபா தேர்தலை முன்னிட்டு, கோட்டூர், ஏரிமலைக்கு,
இரண்டு லாரிகள் மூலம், இக்கிராமங்களின் அடிவாரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. கோட்டூர்மலை அடிவாரத்தில் இருந்து, கோட்டூர் மலைக் கிராமத்துக்கு, சின்னராஜ் வளர்த்து வரும் ரஜினி, கமல், விஜய், அஜீத், சரத்குமார் என பெயர் கொண்ட, ஐந்து கழுதைகள் மூலம், மாலை, பாதுகாப்பாக எடுத்து சென்றனர்.
மேலும், ஏரிமலையில் உள்ள ஓட்டுச்சாவடி மையத்துக்கு, முனிராஜ் என்பவருக்கு சொந்தமான,ஐந்து கழுதைகள் மூலம் மின்னணு ஓட்டு இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை, தேர்தல் அலுவலர்கள் மற்றும்போலீஸார் பாதுகாப்பாக எடுத்து சென்றனர். இதுகுறித்து, கோட்டூர் மலைக் கிராமத்துக்கு, ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்ல கழுதைகள்வழங்கிய சின்னராஜ் கூறியதாவது:

பென்னாகரம் சட்டசபை தொகுதியில் உள்ள வட்டுவனஹள்ளி கிராமத்தை சேர்ந்த கோட்டூர் மற்றும்ஏரிமலைக்கு போதிய சாலை வசதியில்லாமல் உள்ளது. இதனால்,
இப்பகுதிக்கு ஓட்டு இயந்திரங்களை கொண்டு செல்ல கடந்த, 40 ஆண்டுகளாக கழுதைகளை, கட்டணம்பெற்று கொண்டு அனுப்பி வருகிறேன். தற்போது, கோட்டூர் மலைக் கிராமத்துக்கு, ஓட்டு இயந்திரங்களை எடுத்து செல்லும், ஐந்து பஞ்சகல்யாணிகளும், இரண்டாவது முறையாக லோக்சபா தேர்தலுக்கு ஓட்டு இயந்திரங்களை எடுத்து செல்கின்றன. கோட்டூர் மலைக்கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு, அரிசி உள்ளிட்ட பொருட்களை,பொதுமக்களுக்கு வழங்க என்னுடைய, ஐந்து பஞ்ச கல்யாணிகளும் எடுத்து செல்கின்றன. வழக்கமான பாதை என்பதால், ஓட்டு இயந்திரங்களை சிரமம் இன்றி எடுத்து செல்ல முடிகிறது. இதற்காக,இந்தாண்டு கட்டணமாக தேர்தல் அலுவலர்களிடம், 2,000 கேட்டுள்ளேன், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக