வெள்ளி, 25 ஏப்ரல், 2014

தருமபுரி மக்களவைத் தொகுதியில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக பதிவான வாக்கு

தருமபுரி மக்களவைத் தொகுதியில் 81 சத வாக்குகள் பதிவாகின. தருமபுரி மக்களவைத் தொகுதியில் உள்ள தருமபுரி, பாலக்கோடு, அரூர்(தனி), பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, சேலம் மாவட்டம், மேட்டூர் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதியில் 13.57 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தருமபுரி தொகுதியில் அதிமுக சார்பில் பி.எஸ்.மோகன், திமுக சார்பில் ஆர்.தாமரைச்செல்வன், பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ், காங்கிரஸ் கட்சி சார்பில் ராம.சுகந்தன் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ரஜினிகாந்த் மற்றும்சுயேச்சைகள் உள்பட 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தலில் வாக்களிக்க மொத்தம் 1,615 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
வாக்குப் பதிவு நாளான வியாழக்கிழமை காலை 7மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இதில், சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக பதிவான வாக்கு:
பாலக்கோடு
86.05,
பென்னாகரம்
83.02,
தருமபுரி
79.65,
பாப்பிரெட்டிப்பட்டி
82.61,
அரூர் (தனி)
80.50,
மேட்டூர்
76.23 சதம்

என சராசரியாக தருமபுரி மக்களவைத் தொகுதியில் 81.34 சத வாக்குகள்பதிவாகியுள்ளன. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் தருமபுரி மக்களவைத் தொகுதியில் அதிக அளவு வாக்குப் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக