வெள்ளி, 25 ஏப்ரல், 2014

மே 3 முதல் பி.இ., விண்ணப்பம் வினியோகம்.

மே 3 முதல் பி.இ., விண்ணப்பம் வினியோகம்.

"வரும் கல்வி ஆண்டில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேர்வதற்காக, மே, 3ம்
தேதியில் இருந்து, 20ம் தேதி வரை, விண்ணப்பம் வழங்கப்படும்' என, அண்ணா பல்கலை,
நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
எதிர்பார்ப்பு :
"பிளஸ் 2 தேர்வு முடிவு, மே, 9ல் வெளியிடப்படும்' என, தேர்வுத்துறை,ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பம் எப்போது வழங்கப்படும் என்ற அறிவிப்பை, மாணவர்கள் எதிர்பார்த்தபடி இருக்கின்றனர். மே, முதல் வாரம்,விண்ணப்பம் வழங்கப்படும் என, அண்ணா பல்கலை ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த நிலையில், "மே, 3ம் தேதி முதல், 20ம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படும்' என, நேற்று, அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அண்ணா பல்கலையின், இணையதளத்தில் வெளியிடப்பட்ட அட்டவணை விவரம்:
பி.இ., - பி.டெக்., சேர்க்கை கலந்தாய்விற்கான அறிவிப்பு, மே, 2ம் தேதி வெளியிடப்படும். மறுநாள், மே, 3ம்தேதியில் இருந்து, 20ம் தேதி வரை, விண்ணப்பம் வினியோகிக்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, மே, 20ம் தேதி கடைசி நாள். "ரேண்டம்' எண் வெளியாகும் தேதி, "ரேங்க்' பட்டியல் மற்றும் கலந்தாய்வு துவங்கும் தேதி ஆகிய விவரங்கள், பின்னர் வெளியிடப்படும். இவ்வாறு, அண்ணா பல்கலை தெரிவித்து உள்ளது.

2.5 லட்சம் விண்ணப்பம் தயார்மாநிலம் முழுவதும், அரசு பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலை உறுப்பு கல்லூரிகளில், விண்ணப்பங்கள் வழங்கப்படும். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவர், 250 ரூபாய் கொடுத்தும், இதர பிரிவு மாணவர், 500 ரூபாயை கொடுத்தும், விண்ணப்பங்களை பெறலாம். விவரங்கள் : மாணவரின் தேவைக்கு ஏற்ப, 2.5 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளதாக,அண்ணா பல்கலை வட்டாரம் தெரிவித்தது. மாணவர்களுக்கு, விண்ணப்பத்துடன், மாநிலம் முழுவதும் உள்ள, 550
பொறியியல் கல்லூரிகள் குறித்த விவரங்கள் அடங்கிய புத்தகமும் வழங்கப்படும்.

1.75 லட்சம் இடங்கள் : பொறியியல் சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்திரியராஜ் கூறியதாவது: அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டின் கீழ், தற்போது, 1.75 லட்சம் இடங்கள் உள்ளன. தனியார் கல்லூரிகள், ஒவ்வொரு ஆண்டும், அவர்களின் இடங்களை, தானாக முன்வந்து, அண்ணா பல்கலைக்கு அளிக்கின்றனர். கலந்தாய்வு துவங்கும் போது தான், அவர்களின் இடங்களை, "சரண்டர்'செய்வர். எனவே, எவ்வளவு இடங்கள், அரசு ஒதுக்கீட்டிற்கு கிடைக்கும் என்பதை இப்போது கூற முடியாது.இவ்வாறு, ரைமண்ட் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு, தனியார் கல்லூரிகளின், "சரண்டர்' இடங்களுடன் சேர்த்து, கலந்தாய்வுக்கு, 2 லட்சம் இடங்கள் வந்தன. இதில், 1.3 லட்சம் இடங்கள் மட்டுமே நிரம்பின. 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக