சனி, 26 ஏப்ரல், 2014

தமிழகத்தில் புதிய அறிவிப்புகள் வெளியிட வாக்கு எண்ணிக்கை முடியும் வரை தடை நீடிக்கும்

தமிழகத்தில் மக்களவை தேர்தல்நடைபெற்று முடிந்துள்ளதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளில்தளர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் தலைமைச் செயலகத்துக்கு சென்று வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம் என்றும், ஆனால் அதிகாரிகளை நேரடியாக சந்திக்கவோ, புதிய அறிவிப்புகள்எதனையும் வெளியிடவோ கூடாது என்றும் தேர்தல் ஆணையம்கூறியுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடியும் வரை இந்தத் தடை நீடிக்கும் என்று தேர்தல்ஆணையம் அறிவித்துள்ளது,
மேலும் வேட்பாளர்கள் ஜூன் 15ம் தேதிக்குள் தேர்தல் செலவுக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தில்லியிலிருந்து வரும் தேர்தல் பார்வையாளர்களை வேட்பாளர் செலவுக் கணக்கை தணிக்கை செய்வார்கள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக தமிழகத்தில் 2,518 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, இந்த வழக்குகளில், மே 16ம் தேதிக்குள் குற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக