திங்கள், 21 ஏப்ரல், 2014

TRB PG TAMIL/ TET/ TNPSC:திருக்குறளைப்பற்றி சில அரிய தகவல்கள் 2

* உலக மொழியில் உள்ள அறநூல்களில் முதன்மையானது திருக்குறள்.
இது பதிணென்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.

* உலக மொழிகளில் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள்.

* திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்-ஜி.யு,போப்

* திருக்குறள் நூற்றேழு மொழிகளில் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளது.

* 'ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறதி' இதில் நாலு என்பது நாலடியாரையும் இரண்டு என்பது திருக்குறளின் அருமையையும் விளக்குகிறது.

* மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம் 1812-ல் திருக்குறளை முதன்முதலில்
பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டார்.

* '"தொடிற்கடின் அல்லது காமநோய் போல விடிற்கடின்
ஆற்றுமோ தீ" (1159) என்ற குறள் ஒரே எழுத்தில் முடிந்துள்ளது.

* திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்

* திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்- பரிமேலழகர்

* திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.

* திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.

* எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.

.
* திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்

* திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

* ெே என்ற இந்தக் கொம்பு எழுத்துக்கள் இல்லாமல் 17 குறள்கள் உள்ளன.

* சிறப்புப்பெயர்கள்: வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள்
கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர். திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல்,வாயுறை வாழ்த்து தமிழ் மறை, திருவள்ளுவம் என்றபெயர்கள் அதற்குரியவை.

* திருக்குறள் இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை"என்றும் அழைக்கப்படுகிறது

* திருவள்ளுவ மாலை என்பது திருக்குறளின் பெருமை குறித்துச் சான்றோர்
பலர் பாடிய பாக்களின் தொகுப்பாகும்.

* திருக்குறளுக்கு சிறந்த உரை எழுதியவர் பரிமேலழகர். மேலும்
மு.வரததாசனார், மணக்குடவர் என பலர் எழுதியுள்னர்.

* விக்டோரியா மகாராணி, காலையில் கண்விழித்ததும் முதலில் படித்த நூல்
திருக்குறள்.

* திருக்குறளுக்கு உரைசெய்த பதின்மர் தருமர், தாமத்தர், பரிதி, திருமலையர்,
பரிப்பெருமாள், மணக்குதவர், நச்சர், பரிமேலழகர், மல்லர், காளிங்கர்.

* திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்தவர் - வீரமாமுனிவர்.

* அன்புடைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பொறையுடைமை,
அருளுடைமை, அறிவுடைமை, ஊக்கமுடைமை, ஆள்வினையுடைமை,
பண்புடைமை, நாணுடைமை என வள்ளுவர் கூறிய உடைமைகள் 10.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக