செவ்வாய், 22 ஏப்ரல், 2014

"நெட்' தேர்வு அறிவிப்பு: விண்ணப்பிக்க மே 5 கடைசி

கல்லூரி பேராசிரியர் பணிக்கான தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்)அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மே 5 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்லூரி பேராசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்கும்,இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகையைப் பெறுவதற்குமான -நெட்-தேர்வை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஒவ்வொரு ஆண்டும்இரண்டு முறை ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தி வருகிறது. இந்தத் தேர்வில் தகுதி பெறுபவர்கள், நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள்மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர்பணிக்கு விண்ணப்பித்து சேர முடியும். 2014 ஜூன் மாதத்துக்கான தேர்வு இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.29-6-2014 அன்று இந்தத் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு, www.ugcnetonline.in,www.ugc.ac.in ஆகிய இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
முக்கியத் தேதிகள்: ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கவும்,வங்கி சலானை பதிவிறக்கம் செய்யவும் மே 5 ஆம் தேதி கடைசியாகும்.சலான் மூலம் பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்.பி.ஐ.) கட்டணம் செலுத்த மே 7 ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பம் மற்றும் வருகை படிவத்தை பதிவிறக்கம்செய்ய மே 10 ஆம் தேதியும், ஒருங்கிணைப்பு பல்கலை.யில்விண்ணப்பத்தை சமர்ப்பிக்க மே 15 ஆம் தேதியும் கடைசி நாளாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக