.
ஆசிரியர் தகுதித்தேர்வு தமிழகத்தில் ஆசிரியர் தகுதிதேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள் ளது. இந்த தேர்வில்தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற முடியும். இதற்காக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர் களுக்கு தகுதித்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தேர்வில் தேர்ச்சி பெற 90 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று நிர்ண யிக்கப்பட்டு இருந்தது. இத னால் ஆசிரியர்களின் மத்தி யில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீதத்தை தமிழக அரசு குறைத்தது. அதன்படி, தற்போது 82 மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்ச்சி பெற் றாலே ஆசிரியர் தகுதி பெறுவர்
இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நடந்த ஆசி ரியர் தேர்வில், 82 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக கரு தப்படுகின்றனர். எனவே, அவர்களுக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்தது. இதில் ஒவ்வொரு மாவட்டத்தை சேர்ந்த வர்களுக்கும், அந்தந்த மாவட்டங்களிலேயே நடத்தப்படுகிறது.
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 991 பேருக்கு திண்டுக்கல் புனித மரியன்னை பள்ளியில் வருகிற 6- ந்தேதி தொடங்கி 12-ந்தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது. இதற்காக தேர்ச்சி பெற்றவர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு இருக் கிறது. இந்த அழைப்பு கடிதம் கிடைத்தவர்கள் தேர்வு நுழைவுச்சீட்டு, கல்வி சான்றிதழ், மற்றும் இதர சான் றிதழ்களின் அசல், ஆகியவை கொண்டு வர வேண்டும். மேலும் நகல்களில் சான் றொப்பம் பெற்று கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு கல்வித்துறை அதி காரி ஒருவர் தெரிவித் துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக