புதன், 2 ஏப்ரல், 2014

மகாபாரதத்தை சுட்டிக்காட்டி ஜாதிச்சான்றிதழ் கோரிய வழக்கு: மதுரை ஐகோர்ட் உத்தரவு

மகாபாரதத்தை சுட்டிக்காட்டி, தாய்வழி மரபுப்படி ஜாதிச்சான்றிதழ் கோரிய வழக்கில்,
'மனுதாரருக்கு, ஏற்கனவே அரசுத்தரப்பில் பிறப்பித்த உத்தரவை மறு பரிசீலனை செய்து, தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

அம்பாசமுத்திரம் அருகே, ரவண சமுத்திரம் பரமேஸ்வரி தாக்கல் செய்த மனு: என் கணவர் திருமலை; வெள்ளாளர்சமுதாயத்தை சேர்ந்தவர்; நான், இசை வேளாளர் சமுதாயத்தை சேர்ந்தவள். இருவரும் காதலித்து திருமணம்செய்தோம். எங்களின் வாரிசுகள் திருமலைக்குமரன், கோமதிமீனாள். மகள் கோமதிமீனாளருக்கு மிகவும்
பிற்பட்டோர் பிரிவான, நான் சார்ந்த இசை வேளாளர் ஜாதிச்சான்று வழங்குமாறு, அம்பாசமுத்திரம்தாசில்தாரிடம் விண்ணப்பித்தோம்; அவர், முற்பட்ட சமுதாயமான வெள்ளாளர் என குறிப்பிட்டு,ஜாதிச்சான்று வழங்கினார். மகாபாரத புராணத்தின்படி, பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த முனிவர் வியாசருக்கும், சத்ரியகுலத்தைச் சேர்ந்த பெண்ணிற்கும் பிறந்தவர்கள் திருதராஷ்டிரன், பாண்டு. இதனால்,தாய்வழி மரபுப்படி திருதராஷ்டிரன், பாண்டு சத்ரியகுலத்தை சேர்ந்தவர்களாக கருதப்படுகின்றனர்.வியாசருக்கும், வேறு குலத்தை சேர்ந்த பெண்ணிற்கும் பிறந்தவர் விதுரர். இதனால், விதுரரை, அவரது தாய்
வழி சமூகத்தை சேர்ந்தவராகவே, கருதுகின்றனர். கிருஷ்ணர் சத்திரிய வம்சத்தில் பிறந்தவர் என்றாலும்,வளர்த்தது, யாதவர் குல பெண்தான். இன்று வரை, கிருஷ்ணரை யாதவர் சமூகத்தைச் சேர்ந்தவராக கருதுகின்றனர்.சமூக நலத்துறை, 'பெற்றோரின் ஜாதியை மாற்ற முடியாது. இருவரில் ஒருவர், தான் சார்ந்த ஜாதியின் அடிப்படையில், குழந்தைகளுக்கு வாரிசு சான்று கோரினால், அதிகாரி கள் வழங்கலாம்' என, உத்தரவிட்டு உள்ளது. என் மகளுக்கு, இசை வேளாளர் ஜாதிச்சான்று வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள்,வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி கொண்ட பெஞ்ச் முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்வழக்கறிஞர் டி.எஸ்.ஆர்.வெங்கட்ரமணா ஆஜரானார். நீதிபதிகள், 'மனுதாரர் மகளுக்கு, ஏற்கனவே அரசுத்தரப்பில் பிறப்பித்த உத்தரவை மறு பரிசீலனை செய்து, தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக