சனி, 7 மார்ச், 2015

பிளஸ் 2 தமிழ் விடைத்தாள் 'கலக்கி கட்டும்' பணி இன்று துவங்கப்படுகிறது

பிளஸ் 2 தேர்வெழுதியுள்ள, மாணவர்களின் தமிழ் தேர்வுகளுக்கானவிடைத்தாள்களை, 'கலக்கிக் கட்டும்' பணிகள் மிகுந்தபாதுகாப்புடன், இன்று துவங்குகின்றன. இப்பணிகள் முழுவதும், சி.சி.,'டிவி' கேமராக்கள் மூலம் பதிவுசெய்யஉத்தரவிடப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும், பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடந்து வருகின்றன.
தமிழ் பாடத்துக்கான தேர்வுகள் நேற்று முடிந்துள்ள நிலையில், விடைத்தாள்கள் கலக்கி, பிரித்து கட்டும் பணிகள் இன்று துவங்குகின்றன.ஒவ்வொரு, தேர்வுக்கு பின்பும், வழித்தட அலுவலர்களின் மூலம், பாதுகாப்புடன் விடைத்தாள்கள் சேகரிக்கப்பட்டு, பள்ளியில் வைக்கப்பட்டு வருகின்றன. தற்போது, தமிழ் பாடங்களுக்கான இரண்டு விடைத்தாள்கள் மற்றும் இந்தி, பிரெஞ்ச் உள்ளிட்ட பிற பாடங்களுக்கான,
விடைத்தாள்கள் கலக்கி, பிரித்து கட்டும் பணிகள் நடக்கின்றன. இப்பணிகளின் போது, எவ்வித முறைகேடுகளும் நடக்காத வகையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் .இப்பணிகள், நடக்கும் பள்ளி வளாகத்தில்அலுவலர்கள் வருவதற்கும், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இப்பணிகள் துவங்குவதற்கு முன்பு முதல், முடியும் வரை அனைத்து பணிகளும் வீடியோ கேமராக்களில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக