ஆதார் அடையாள அட்டை தயாரிக்கும்பணியை மத்திய அரசு ரூ. 50 ஆயிரம்
கோடிக்கு வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது.இவ்வாறு பணி வழங்கப்படும் முன்பு அந்த நிறுவனம் இந்தியாவில்பதிவு செய்யப்பட்டதா, அதன் ஊழியர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்களா என பரிசீலித்து முடிவெடுக்கவில்லை. மேலும், வெளிநாட்டு நிறுவனத்தை நியமிக்க சட்டப்பூர்வ அங்கிகாரம்பெறப்படவில்லை. ஆதார் அட்டையில் இந்திய குடிமக்களின் அங்க அடையாளங்கள் உள்ளிட்டதகவல்கள் இடம்பெறுகின்றன. இவை வெளிநாட்டு நிறுவனம் மூலம் எதிரி நாடுகளுக்கு வழங்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, ஆதார் அடையாளஅட்டையைத் தயாரிக்க தனி துறையை ஏற்படுத்தி, அதற்கான
பணியாளர்களை நியமிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
ஆதார் அட்டை தொடர்பாக ஓய்வுபெற்றநீதிபதி கே.எஸ்.பட்டுசாமி தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில்நிலுவையில் உள்ளது. இவ் வழக்கில் ஆதார் அட்டை பெறாதவர்களை எந்தவகையிலும் கட்டாயப்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஆதார் அட்டை பெறுவது கட்டாயமில்லை என மத்திய அரசும் உறுதி கூறியுள்ளது. இவ் வழக்கில் ஆதார் அட்டைக்கான சட்டப்பூர்வ அந்தஸ்து குறித்து பதில் மனுக்களை தாக்கல் செய்யும்படி மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இவ் வழக்கு நிலுவையில் இருந்துவரும் நிலையில் எரிவாயு மானியம்பெறுவதற்கு ஆதார் எண்ணை வங்கிகளில் பதிவு செய்யுமாறு செல்போன்எஸ்எம்எஸ் மூலம் எரிவாயு நிறுவனங்கள் கட்டாயப்படுத்தி வருகின்றன. இந்தநடவடிக்கை உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியதாகும். எனவே, ஆதார் எண்கேட்கும் எரிவாயு நிறுவனங்கள் மீது நீதிமன்றஅவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஆதார் எண் பெறாதவர்களுக்கு எரிவாயு சிலிண்டர்கள் வழங்க மறுக்கும்எரிவாயு ஏஜென்சிகளுக்கு மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை வழங்கிய உரிமத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். ஆதார்
அட்டை தொடர்பான இறுதி முடிவு வரும் வரையில்அரசு சேவைகளுக்கு இத் திட்டத்தைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, மனுவுக்கு வரும் 7-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு மத்திய கேபினட் அமைச்சகச் செயலர், மத்திய உள்துறை, பெட்ரோலியத் துறை செயலர்கள், இயற்கை எரிவாயு நிறுவனத் தலைவர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக