விண்ணப்பக் கட்டணம் ரூ.750. எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு ரூ.350. உரிய விண்ணப்பக்கட்டணத்தை ‘பதிவாளர், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை’ என்ற பெயரில்டிமாண்ட் டிராப்ட் ஆக செலுத்தி பதிவாளர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பம் வாங்கும்போது எஸ்.சி. எஸ்.டி. வகுப்பினர் சாதிச் சான்றிதழ் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.
ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.tnteu.in) விண்ணப்பத்தை பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம். இந்த முறையில் விண்ணப்பிக்கும்போது உரிய விண்ணப்பக் கட்டணத்துக்கான டிமாண்ட் டிராப்டை இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பம் வழங்கவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்களை சமர்ப்பிக் கவும் ஜனவரி 27-ம் தேதி கடைசி நாள் ஆகும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் விரிவாக தெரிந்துகொள்ளலாம் என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) பேராசிரியர் பி.ஏ.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக