செவ்வாய், 15 ஏப்ரல், 2014

வி.ஏ.ஓ., தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள்.

வருவாய்த் துறையில், 2,342,கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) பணியிடங்களை நிரப்ப, கடந்த மாதம், 17ம் தேதி, அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,), அறிவிப்பை வெளியிட்டது. அன்றில் இருந்து,www.tnpsc.gov.in என்ற, தேர்வாணைய இணையதளம் வழியாக, தேர்வர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். பத்தாம் வகுப்பு கல்வி தகுதி நிலையில் நடக்கும்தேர்வு என்பதால், போட்டி போட்டு விண்ணப்பித்தனர். இதனால், நேற்று வரை, 10 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருப்பதாக கூறப்படுகிறது. இன்று, இரவு, 11:59 மணி வரை,இணையத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணம் செலுத்த, 17ம் தேதி கடைசி நாள். ஜூன், 14ல்,போட்டி தேர்வு நடக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக