சனி, 21 ஜூன், 2014

25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவ-மாணவிகள் தனியார் சுய நிதி பள்ளிகளில் சேருவதற்கு வாய்ப்பு

திருச்சி மாவட்டத்தில் நலிந்த பிரிவை சேர்ந்த மாணவ-மாணவிகள் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேருவதற்கு வருகிற 30-ந் தேதி வரை விண்ணப்பம் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருச்சி மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 25 சதவீத ஒதுக்கீடு திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி வயது குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009- ன்படி வாய்ப்பு மறுக்கப்பட்ட நலிந்த பிரிவினருக்கு திருச்சி மாவட்டத்தில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி மெட்ரிக் மற்றும் நர்சரி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கு உரிய விண்ணப்பங்களை அருகாமையில் உள்ள தனியார் சிறுபான்மையற்ற பள்ளிகளில் பெற்றுக்கொண்டு 31.05.2014-க்குள் உரிய ஆவணங்களுடன் இணைத்து தாங்கள் விண்ணப்பம் பெற்ற பள்ளியில் விண்ணப்பம் அளித்திட கேட்டுக்கொள்ளப்பட்டது.
தற்போது பள்ளி கல்வித்துறையில் விண்ணப்பங்கள் வழங்கப்படும் நாள் வருகிற 30-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு விருப்பமுள்ள பெற்றோர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் பள்ளிகளில் சேர்ந்திட ஏதுவாக சேர்க்கை ஆணை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் வழங்கப்படும். அம்மாணவர்களின் கல்விக்கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக