சனி, 21 ஜூன், 2014

TET பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்கக் கோரி, பட்டதாரிகள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

.TET 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே, நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காசிநாதன் தலைமை வகித்தார். அதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் தகுதி தேர்வு, கடந்த ஆண்டு ஆகஸ்டு 18ம் தேதி நடந்தது. 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற்ற தங்களுக்கு, பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக