புதன், 5 நவம்பர், 2014

இது உ.பி.,யில்.... 315ஐ, மூன்றால் வகுக்க தெரியாமல், 'திருதிரு'வென விழித்த பள்ளி ஆசிரியை !

உ.பி.,யில், 315ஐ, மூன்றால் வகுக்க தெரியாமல், 'திருதிரு'வென விழித்த பள்ளி ஆசிரியை,கல்வி துறை அதிகாரியால் அதிரடியாக,சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
உ.பி., மாநிலம் கான்பூர் அருகே, ஹர்கா என்ற கிராமம்உள்ளது. இங்குள்ள தொடக்கப் பள்ளியில்ஆய்வு நடத்துவதற்காக, கல்வி துறை அதிகாரி ராஜேந்திரபிரசாத், சமீபத்தில் சென்றார்.அவர் சென்றபோது, அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பெரும்பாலான ஆசிரியர்கள் வகுப்பறைக்கு வெளியில், மொபைல் போனில் அரட்டை அடித்து கொண்டிருந்தனர்.பின்,அங்குள்ள மூன்றாம் வகுப்புக்கு அந்த அதிகாரி சென்றார்.
மாணவிகள் சிலரை எழுப்பி, 315 என்பதை, எண் வடிவில் எழுதும்படி கூறினார். அவர்களுக்கு எழுத தெரியவில்லை; சில மாணவர்கள், தவறாக எழுதினர்.அதிர்ச்சி அடைந்த அதிகாரி,வகுப்பாசிரியை ருசி ஸ்ரீவத்சவாவிடம், 315 ஐ, மூன்றால் வகுத்து காட்டும்படி கூறினார். ஆனால், அவர், அதை வகுக்க முடியாமல், திரு திருவென விழித்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.அதிகாரி ராஜேந்திர பிரசாத், இதையடுத்து, பள்ளி யின் தலைமை ஆசிரியர், மூன்றாம் வகுப்பு ஆசிரியை ருசி,
மம்தா, சபனா ஆகிய ஆசிரியைகளை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக