செவ்வாய், 4 நவம்பர், 2014

கூகுள் குரல் வழி தேடுதலில் விரைவில் தமிழ்!


இணையதளதேடுபொறியில்  முன்னணியில் உள்ள,கூகுள் நிறுவனம்,குரல்வழிமூலமாக,தகவல்களை தேடும் வசதியையும் அறிமுகப்படுத்தி உள்ளது. ஆங்கிலம் உள்ளிட்ட சில மொழிகளில், இந்த வசதி ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் இணையதளம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, அதிகரித்து வருவதை அடுத்து, அவர்களுக்கு உதவும் வகையில், இந்தி மொழி மூலமான குரல் வழி தேடுதல் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.


கூகுள் இந்தியா நிறுவனத்தின், மேலாண்மை இயக்குனர் ராஜன் ஆனந்தன் கூறியதாவது:

இந்தியாவில், 20 கோடி பேர் இணையத்தை பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு மாதமும், 50 லட்சம் பேர், புதிதாக இந்த பட்டியலில் இணைகின்றனர். இவர்களுக்கு உதவுவதற்காகவே, தற்போது, குரல் வழி தேடுதலில் இந்தி மொழியை இணைத்து உள்ளோம். அடுத்தகட்டமாக, தமிழ், மராத்தி ஆகிய மொழிகளையும் இணைக்கும் திட்டம் உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் கூறுகையில், ''இந்திய மொழிகளில் இணைய வசதி கிடைத்தால், இவற்றை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, 50 கோடியை தொட்டு விடும். இதன்மூலம், பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள, 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியும்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக