திங்கள், 2 நவம்பர், 2015

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு :சென்னை பாரிமுனையில்இலவச பயிற்சி


தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், வங்கி, அரசு ஊழியர், பிஎஸ்என்எல் மற்றும் ரயில்வே தொழிற்சங்கங்கள் இணைந்து ஆதிதிராவிட மற்றும் பொருளா தாரத்தில் பின்தங்கிய மாணவர் களுக்கு வேலைவாய்ப்பு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பை நடத்தி வருகிறது.

இதன்படி, டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 11-ம் தேதி கடைசி நாளாகும். இதையொட்டி இப் பயிற்சி மையத்தின் சார்பில் நவம்பர் 1 (ஞாயிற்றுக்கிழமை) முதல் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

இதுதவிர கடந்த 6 மாதங்களில் யுனைடெட் இந்தியா, ஓரியண்டல் இன்சூரன்ஸ் நடத்திய போட்டித் தேர்வில் வெற்றிபெற்ற தேர்வர் களுக்கு மாதிரி நேர்காணலுக்கான பயிற்சியும் நடத்தப்படவுள்ளது.

இவ்விரு வகுப்புகளிலும் சேர விரும்புவர்கள், சென்னை பாரிமுனையில் உள்ள சிஐடியு அலுவலகம் எண், 6 கச்சாலீஸ்வரர் கோயில் அக்ரஹாரத்தில் (அரண் மனைக்கார தெரு) உள்ள பயிற்சி மையத்தை அணுகலாம். வாரந் தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமை களில் காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை வகுப்புகள் நடை பெறும்.

மேலும் விவரங்களுக்கு 9444641712944403074594449823649444241696 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.