ஞாயிறு, 1 நவம்பர், 2015

'இல்லங்கள் தோறும் இணையம்' :டிசம்பரில், வீடுகளுக்கான இணைய வசதி

அரசு கேபிள், 'டிவி' மூலம் அளிக்கப்படும் இணைய இணைப்புக்கு, இலவச, 'மோடம்' வழங்க
முடிவு செய்யப்பட்டு உள்ளது.'அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் மூலம், 'இல்லங்கள் தோறும்
இணையம்' என்ற திட்டம் அமல்படுத்தப்படும்' என, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இத்திட்டத்தை செயல்படுத்த, 32 மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் மற்றும், 264 தாலுகா
அலுவலகங்களில், கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படுகின்றன. இங்கிருந்து, கேபிள் ஆபரேட்டர்களுக்கு இணைப்பு வழங்கப்படும்; அவர்கள், அந்த இணைப்பை வீடுகளுக்கு கொண்டு
செல்வர்.சர்வதேச 'டெண்டர்'இதுகுறித்து, அரசு கேபிள், 'டிவி' மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:இணையவசதி அளிப்பதற்கான உரிமம், அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்திடம் உள்ளது. எனவே, கலெக்டர் மற்றும் தாலுகாஅலுவலகங்களில், கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படும். இணைய நெட்வொர்க் வசதி பெற, சர்வதேச, 'டெண்டர்'கோரப்பட்டு உள்ளது. இந்த டெண்டர் நவ., 26ல் திறக்கப்படும். இதில், நெட்வொர்க் வசதி அளிக்கும் நிறுவனம்முடிவு செய்யப்படும். இதன்பின், டிசம்பரில், வீடுகளுக்கான இணைய வசதி செயல்பாட்டுக்கு வரும். வீடுகளுக்கு இணைய வசதி அளிக்க, மோடம் தேவை. இதை, அரசு கேபிள் 'டிவி' நிறுவனமே, இலவசமாக அளிக்கதிட்டமிட்டுள்ளது; இதற்கான பணி துவங்கி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.