திங்கள், 2 நவம்பர், 2015

சிறப்பாசிரியர் தேர்வு விண்ணப்பங்கள் தயார் : அரசு அனுமதி கிடைத்தவுடன் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும்

மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக அரசு அனுமதி கிடைத்தவுடன் சிறப்பாசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி தெரிவித்தார்.

பள்ளிக்கல்வி இயக்குநரக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர்கள் முன்பு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக் கப்பட்டு வந்தனர். ஆரம்பத்தில் மாவட்ட அளவிலான பதிவுமூப்பும் அதன்பிறகு மாநில அளவிலான பதிவுமூப்பும் பின்பற்றப்பட்டது.

இந்த நிலையில், சிறப்பாசிரி யர் நியமனம் தொடர்பாக தொட ரப்பட்ட ஒரு வழக்கில், வெறுமனே பதிவுமூப்பு அடிப்படையில் மட்டும் ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத் தின் மதுரை கிளை கடந்த 9.6.2014 அன்று ஓர் உத்தரவைப் பிறப்பித்தது. நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, பதிவு மூப்பு அடிப்படையில் இல்லாமல் போட்டித் தேர்வு மூலம் சிறப்பா சிரியர்களை நியமிக்க அரசு முடிவு செய்தது.

அது தொடர்பான அரசாணை 17.11.2014 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி, பணி நியமனத்துக்கு 100 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டது. அதில் 95 மதிப்பெண் எழுத்துத் தேர்வுக்கும், எஞ்சிய 5 மதிப்பெண், உயர் கல்வித்தகுதி, பணி அனுபவம், நேர்காணல், என்சிசி, என்எஸ்எஸ் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்டது.

போட்டித் தேர்வு மூலம் சுமார் 1,400 சிறப்பாசிரியர் பணியிடங் களை நிரப்புவதற்கான பணி களை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வந்தது. இதற் கிடையே, பார்வையில்லாதவர், காது கேளாதோர், உடல் ஊன முற்றோர் ஆகிய மாற்றுத்திறனாளி களுக்கான 3 சதவீத ஒதுக் கீட்டை (ஒவ்வொரு பிரிவுக்கும் தலா 1 சதவீதம்) அரசுப் பணி யில் ஒழுங்காக நடைமுறைப் படுத்துமாறு அண்மையில் உச்ச நீதிமன்றம் ஓர் உத்தரவைப் பிறப் பித்தது.

விண்ணப்பங்கள் தயார்

இதைத் தொடர்ந்து, ஓவியம், தையல், உடற்கல்வி ஆசிரியர் உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணி களில் எந்தெந்த மாற்றுத்திற னாளிகளுக்கு எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது என்பது குறித்து அரசிடம் அனுமதி கேட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் 'தி இந்து'விடம் தெரிவித்தார். ஓவிய ஆசிரியர் பணியில் பார்வையில்லாதவர்களுக்கோ, அதேபோல் உடற்கல்வி ஆசிரி யர் பணியில் உடல் ஊனமுற்ற வர்களுக்கோ இட ஒதுக்கீடு வழங்க இயலாது.

மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவீத இட ஒதுக்கீடு தொடர் பாக அரசு அனுமதி கிடைத்ததும் சிறப்பாசிரியர் தேர்வுக்கான அறி விப்பு உடனடியாக வெளியிடப் படும் என்றும் விண்ணப்பப் படிவங்கள் தேவையான அளவு அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக அரசு அனுமதி கிடைத்ததும் சிறப்பாசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு உடனடியாக வெளியிடப்படும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.