வியாழன், 26 நவம்பர், 2015

ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த, குழு ஒன்றை, மத்திய நிதியமைச்சகம் நியமித்து உள்ளது

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த, குழு ஒன்றை, மத்திய
நிதியமைச்சகம் நியமித்து உள்ளது.ஓய்வுபெற்ற நீதிபதி, ஏ.கே.மாத்துார் தலைமையிலான, ஏழாவது
ஊதியக்குழு, தன் பரிந்துரைகளை, மத்திய நிதியமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது. அதில், மத்திய
அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு, 23 சதவீத ஊதிய உயர்வு வழங்க
பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த,
அமல்படுத்தும் குழு ஒன்றை, மத்திய நிதியமைச்சகம் அமைத்துள்ளது. செலவீனத் துறையின் இணைச் செயலர் அளவிலான அதிகாரி ஒருவரின் தலைமையில், ஒன்பது அதிகாரிகள் இந்த குழுவில்
இடம்பெற்றுள்ளனர்.