வியாழன், 5 நவம்பர், 2015

TRB DIET :ஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர் போட்டித் தேர்வுக்கு புதிய பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக நேரடியாக நிரப்பப்பட உள்ள DIET முதுநிலை விரிவுரையாளர், விரிவுரையாளர், இளநிலை விரிவுரையாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்குப் புதியபாடத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 
மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் (டயட்) முதுநிலை விரிவுரையாளர், விரிவுரையாளர், அரசு ஆசிரியர் பயிற்சிநிறுவனங்களில் இளநிலை விரிவுரையாளர் ஆகிய பணி யிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வுமூலமாக நேரடியாக நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு 30 முதுநிலை விரிவுரையாளர் களும், 41 விரிவுரையாளர்களும் 18 இளநிலை விரிவுரை யாளர்களும்நியமிக்கப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வி மானியக்கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில்,முதுநிலை விரிவுரையாளர், விரிவுரையாளர், இளநிலை விரிவுரையாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்குப்புதிய பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 2-ம் தேதியிட்ட அரசிதழில் (சிறப்பு வெளியீடு- எண் 232) தமிழ்,ஆங்கிலம், இயற்பியல், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல், உடற்கல்வி எனபாடவாரியாக பாடத்திட்டத்தை தெரிந்து கொள்ளலாம்.

பாடத்திட்டம் download address
http://www.stationeryprinting.tn.gov.in/extraordinary/2015/232-Ex-II-2.pdf