ஞாயிறு, 5 ஜனவரி, 2014

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டு பொங்கல்போனஸ் அறிவிவிக்கப்பட்டுள்ளது.


முதல் அமைச்சர் ஜெயலலிதா இன்று அரசு ஊழியர்களுக்கு பொங்கல்போனஸ் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- 
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டு பொங்கல்போனஸ் அறிவிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சி,டி பிரிவி ஊழியர்களுக்கு அதிகப்பட்சமாக ரூபாய் 3 ஆயிரத்திற்கு உட்பட்டு ஒரு மாத ஊதியம் போனஸாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். ஏ, பி ஊழியர்களுக்கு ரூபாய் 1000 போனஸ் வழங்கப்படும் எனவும்,ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், முன்னாள் விஏஒ-க்களுக்கு ரூபாய் 500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக