சனி, 15 பிப்ரவரி, 2014

10ம் வகுப்பு பொது தேர்வை எழுத உள்ள மாணவ, மாணவியர்விவரங்களை தொகுக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது

மார்ச், 26ல் இருந்து, ஏப்ரல், 9 வரை நடக்க உள்ள, 10ம் வகுப்பு பொது தேர்வை, 10.42 லட்சம்மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். பொது தேர்வை எழுத உள்ள மாணவ, மாணவியர்விவரங்களை தொகுக்கும் பணி, மும்முரமாக நடந்து வருகிறது.

தேர்வெழுதும் மாணவர்குறித்த, சரியான புள்ளி விவரம், இம்மாதம், 17ம் தேதி தெரிய வரும். கடந்த ஆண்டு, 10.51லட்சம் பேர், 10ம் வகுப்பு தேர்வு எழுதினர். இந்த எண்ணிக்கையை விட, சில ஆயிரம், இந்தஆண்டு குறையலாம் என, தெரிய வந்துள்ளது. இந்த குறைவுக்கு, 10ம் வகுப்பு வருவதற்குள், படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர் காரணமாக இருக்கலாம் என, கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு,ஒட்டுமொத்த தேர்ச்சி, 89 சதவீதமாக இருந்தது. மாணவர்களில், 86 சதவீதம் பேரும், மாணவியரில், 92 சதவீதம்பேரும், தேர்ச்சி பெற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக