நாடு முழுவதும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய இரு நாள்களில் மத்தியஅரசு ஊழியர்கள் 48 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தில்ஈடுபடுவார்கள் என மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனத்தின்பொதுச்செயலாளர் எம்.துரைபாண்டியன் தெரிவித்தார்.
இது குறித்து சென்னையில் அவர் கூறியதாவது: 7-வது ஊதியக்குழு அமைக்கப்படும் என கடந்த ஆண்டு செப்டம்பரில் மத்தியஅரசு அறிவித்தது. அதன் பின்னர், ஊதிய வரையறை குறித்து ஊழியர்தரப்பிலும் இறுதி செய்யப்பட்டு அக்டோபர் 25-ஆம் தேதி அரசிடம்
வழங்கப்பட்டது. பஞ்சப் படியை அடிப்படை சம்பளத்துடன் இணைத்து வழங்கிய பின்னர்தான்
ஊதியக்குழு குறித்த அறிவிப்பு வெளியிடப்படுவது வழக்கம். ஆனால்,இதுவரை இருந்து வந்த நடைமுறைக்கு எதிராகதற்போது அரசு செயல்பட்டுள்ளது. பஞ்சப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பது, இடைக்கால நிவாரணம்வழங்குவது உள்ளிட்டவை குறித்து எந்த முடிவையும் அரசு எடுக்கவில்லை. ஊதியக் குழுவில் மத்திய அரசு ஊழியர்கள் தரப்பு பிரதிநிதிகளையும் சேர்க்க கோரிக்கை விடுத்தோம். அது குறித்த எந்தவித அறிவிப்பும்
வெளியிடப்படவில்லை. ஊதிய வரையறைக்குள் கிராமப்புற அஞ்சலக ஊழியர்களையும் கொண்டு வரவேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டதைத் திரும்ப பெற வேண்டும் என்பன
உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், எதையும் மத்திய அரசு கருத்தில் கொள்ளவில்லை.
எனவே மத்தியஅரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் அகில இந்திய செயற்குழு ஜனவரி 10-ஆம் தேதி தில்லியில் கூடி விவாதித்தது. அதில், பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய இரு நாள்களில் மத்திய அரசு ஊழியர்கள் நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட
முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி இந்தியா முழுவதும் 12 லட்சம் ஊழியர்கள்
48 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். தமிழகத்தில் 1.5 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்கின்றனர். தபால் துறை, வருமானவரி, கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிறுவனம், சாஸ்திரி பவன், ராஜாஜி பவன், மத்திய சுகாதாரத்துறை உள்ளிட்ட 45-க்கும் மேற்பட்ட துறைகளில் உள்ள மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்றனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியம் திருத்தியமைக்கப்படுகிறது. ஆனால்,பொதுத்துறைகளில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியம் திருத்தியமைக்கப்படுகிறது. பொதுத்துறை நிறுவன ஊழியர்களைப் போன்று மத்தியஅரசு ஊழியர்களுக்கும் 5 ஆண்டுக்கு ஒரு முறை ஊதியம்
திருத்தியமைக்கப்பட வேண்டும். இல்லையெனில் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில்
ஈடுபடுவது தொடர்பாக தில்லியில் மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனத்தின் அகில இந்திய செயற்குழு மீண்டும் கூடி முடிவு எடுக்கும் என துரைபாண்டியன் தெரிவித்தார்.
Sent from my iPad
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக