இதுதொடர்பாக சட்டப் பேரவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட
நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் உயர் கல்விச் சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதற்காக கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் அரசு கல்வி நிறுவனங்களை அமைக்க வேண்டும் என்ற குறிக்கோளை தமிழக அரசு கொண்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 12 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், 24 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், 4 பொறியியல் கல்லூரிகள், 11பாலிடெக்னிக்குகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளன.
மேலும் பல்வேறு அரசுக் கல்வி நிறுவனங்களில் 798 புதிய பாடப்
பிரிவுகளை தொடங்கவும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத் துறையை மேலும் மேம்படுத்தும் வகையில் 2014-15 ஆண்டில் பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கான மானியமாக ரூ. 979.32
கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் உயர் கல்வித் துறைக்கென 2014-15 ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ரூ. 3,627.93 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் தலைமுறை மாணவர் திட்டத்துக்கு ரூ. 585.17 கோடி: பட்டப் படிப்பை மேற்கொள்ளும் முதல் தலைமுறை மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை திருப்பி அளிக்கும் திட்டத்துக்காக கடந்த 2013-14 ஆண்டுக்கு ரூ. 650 கோடி ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் 2,73,675 மாணவ,மாணவிகள் பயனடைந்தனர். வரும் 2014-15 ஆம் ஆண்டில் முதல் தலைமுறை மாணவர்கள் பயன்பெறும் வகையில் முன்கூட்டியே ரூ. 585.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் காரணமாக 2010-11 ஆம்ஆண்டில் 6 லட்சத்து 51,807-ஆக இருந்த மாநிலத்தில் உயர் கல்வி சேர்க்கை 2013-14 ஆம் ஆண்டில் 7 லட்சத்து 31,485 ஆக உயர்ந்துள்ளது.
விளையாட்டு வளர்ச்சிக்கு ரூ. 146.64 கோடி: மாநிலத்தில் விளையாட்டை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு வகுத்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் உள் விளையாட்டு அரங்குகள், வீரர்கள் தங்கும் விடுதிகள், நீச்சல் குளம், உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ. 380.77
கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் இத் திட்டங்களுக்காக ரூ. 146.64
கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Sent from my iPad
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக