சனி, 15 பிப்ரவரி, 2014

பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் ரகசிய “பார்கோடு” கொண்ட விடைத்தாள்கள் மாவட்டமையங்களுக்கு தேர்வுத்துறை அனுப்பிவைத்துள்ளது.

பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் ரகசிய "பார்கோடு" கொண்ட விடைத்தாள்கள் மாவட்டமையங்களுக்கு தேர்வுத்துறை அனுப்பிவைத்துள்ளது.அவை வரும் திங்கள் முதல் சம்மந்தப்பட்ட தேர்வு மையங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என தெரிகின்றது.
தேர்வின்போது மாணவர்களோ, விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்களோ முறைகேடு செய்வதை தடுக்க எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் ரகசிய "பார்கோடு" கொண்ட விடைத்தாள் அறிமுகப்படுத்தப்படுகிறது. பிளஸ்-2 பொதுத் தேர்வு மார்ச் 3-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரையிலும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 26-ல் ஆரம்பித்து ஏப்ரல் 9-ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.
12-ம்வகுப்புத் தேர்வை 8.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகளும், 10-ம்
வகுப்பு தேர்வை கிட்டதட்ட 11 லட்சம் பேரும் எழுத இருக்கிறார்கள். 2014-ல் நடத்தப்படும் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில்அரசு தேர்வுத்துறை பல்வேறு புதிய முறைகளை அறிமுகப்படுத்த உள்ளது. மாணவர்களின் புகைப்படம், ரகசியக் குறியீடு (பார்கோடு) ஆகியவற்றுடன் ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனி விடைத்தாள்கள் வழக்கமான பக்கங்களை விட அதிகரித்து வழங்கப்பட இருக்கின்றன.

அதன்படி, எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு 30 பக்கங்கள் கொண்ட விடைத்தாள் ஒரே கட்டாகவும்,பிளஸ்-2 மாணவர் களுக்கு 40 பக்கங்கள் கொண்ட விடைத்தாள் ஒரே கட்டாகவும், உயிரியல் மாணவர்களுக்கு மட்டும் 52 (தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கு தலா 26 பக்கங்கள்) பக்கங்கள்கொண்ட ஒரே விடைத்தாள் கட்டாகவும் கொடுக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக