கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பாடப்பிரிவுகளில் சேர சி.எஸ்.ஐ.ஆர். 'நெட்' தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஆண்டுதோறும் இரண்டு முறை (ஜூன், டிசம்பர்) இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
கணிதம், அறிவியல், பொறியியல், தொழில்நுட்பப் பாடப்பிரிவுகளில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் அவசியம். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள் எனில் 50 சதவீத மதிப்பெண் போதுமானது. 28 வயதுக்கு உட்பட்டவர்கள் ஜெ.ஆர்.எப். உதவித்தொகை திட்டத்துக்கும் பரிசீலிக்கப்படுவர். இதில் எஸ்.சி, எஸ்.டி., ஓ.பி.சி. வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள், பெண்கள் ஆகியோருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும்.
இந்த ஆண்டுக்கான முதல் சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு, வரும் ஜூன் 22-ம் தேதி சென்னை, காரைக்குடி உள்பட நாடு முழுவதும் 26 முக்கிய நகரங்களில் நடத்தப்படவுள்ளது. இதற்கு ஆன்லைனில் (www.csirhrdg.res.in) மார்ச் 3-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் ஆன்லைன் விண்ணப்ப விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று சி.எஸ்.ஐ.ஆர். நிறுவனம் அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக