புதன், 12 பிப்ரவரி, 2014

பார்வையற்ற மாற்றுத்திறனாளி பி.எட் பட்டதாரிகளுக்கு சிறப்புத்

பார்வையற்ற மாற்றுத்திறனாளி பி.எட் பட்டதாரிகள் சிறப்பு தகுதித் தேர்வில்எளிதாக தேர்ச்சி பெறும் வகையில் அந்தந்த மாவட்ட ஆசிரியர்பயிற்சி நிலையங்களின் சார்பில் இலவசபயிற்சி அளிப்பதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பி.எட் படித்து பணியில்லாமல் இருக்கும்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதாக பணி கிடைக்கும் வகையில்ஆசிரியர் தேர்வு வாரியத்தால் சிறப்பு தகுதித் தேர்வு நடத்தப்படஇருக்கிறது. இத்தேர்வு எழுத விண்ணப்பிக்கிறவர்களுக்கு அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சி நிலையங்களில்சிறப்பு பயிற்சி அளிப்பதற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் இத்தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்துள்ளவர்கள்
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தங்கள்பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இவர்களுக்கானஇப்பயிற்சி வகுப்பு விருதுநகர் சுப்பையா நாடார்
அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வருகிற 22-ம் தேதி தொடங்கி,தேர்வுக்கு முதல் நாள் வரையில் தொடர்ந்து நடைபெற இருக்கிறது. எனவே இந்த வாய்ப்பை பார்வையற்ற மாற்றுத்திறனாளி பட்டதாரிகள்பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக