புதன், 19 பிப்ரவரி, 2014

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியீடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு -dinathandhi. NEWS

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இதையொட்டி ஆசிரியர் தேர்வு வாரியம் இதற்கான போட்டித்தேர்வை கடந்த ஜூலை மாதம் நடத்தி, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதனையொட்டி பல பாடப்பிரிவுகளுக்கு தேர்வு எழுதியஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தை எதிர்த்து நீதிமன்றத்தை நாடினார்கள்.
இதையடுத்து நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ் பாடத்திற்குரிய முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டது. அவர்களுக்கு விரைவில் பணி ஆணை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் விலங்கியல், உயிரி வேதியியல் (பையோ கெமிஸ்ட்ரி), மனை அறிவியல் (ஹோம் சயின்ஸ்), புவியியல் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை–1 ஆகிய 5 பாடங்களுக்கு உரிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அந்தபட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. மற்ற பாடங்களுக்கு உரிய ஆசிரியர் தேர்வு பட்டியல், கோர்ட்டு தீர்ப்பு வந்த பிறகு வெளியிடப்படும் என்று தெரிகிறது.

Source dinathandhi


Sent from my iPad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக