சனி, 12 ஜூலை, 2014

ஆசிரியர் செம்மல் விருது

 

தமிழகக் கல்வி  ஆராய்ச்சி  வளர்ச்சி நிறுவனம்,  ஆணடுதொறும்  இந்தியக் குடியரசின்  மேனாள்  தலைவர்   டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் இல்லத்தில் ஆசிரியர் தினத்தன்று  ஆசிரியர் செம்மல் விருதினை அனைத்துத் தர ஆசிரியர்களுக்கும் ( பல்கலைக் கழகம்கல்லூரிமேனிலை, உயர்நிலைஇடைநிலைதொடக்கம்) கடந்த 10ஆண்டுகளாக வழங்கிவருகிறது.  இவ்வாண்டும் 05-09-2014 அன்று வழங்கவிருக்கிறது.

விருதுபெறுவதற்கான வயது வரம்பு 50 - 56.  விருது பரிந்துரைப்பதற்கான விண்ணப்பத்தினை  இயக்குநர்தமிழகக்  கல்வி  ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம், 48 வட்டச்சாலை,கோடம்பாக்கம் என்னும் முகவரியிலிருந்து பெற்று 14-08-2014க்குள் இயல்பு அஞ்சலில் (Ordinary Post ) அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அல்லது  www.tierachennai.org இல் விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்துகொள்க.தொடர்பு எண்கள் 9444251395, 9444494839,  9840308855

 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக