வியாழன், 21 ஜனவரி, 2016

தமிழக 'செட்' தேர்வு அறிவிப்பு

தமிழக 'செட்' தேர்வு அறிவிப்பு
தமிழக அரசின் உதவிப் பேராசிரியர் பணிக்கான, 'செட்' தகுதித்தேர்வு அறிப்பு வெளியாகியுள்ளது.
கல்லுாரி மற்றும் பல்கலைகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின்,
'நெட்' அல்லது மாநில அரசின், 'செட்' தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதில், 'நெட்' தேர்வை, கடுமையான கட்டுப்பாடுகள், தரமான வினாத்தாளுடன், மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான,சி.பி.எஸ்.இ., நடத்துகிறது; 'செட்' தேர்வு, மாநில அரசால் நடத்தப்படுகிறது.பாரதியார் பல்கலை, 2012ல் நடத்திய, 'செட்' தேர்வுக்கு பின் தற்போது, அன்னை தெரசா பல்கலை மூலம் புதிய, 'செட்' தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது; பிப்., 20ல்தேர்வுநடக்கிறது.
இதற்கு, http:/www.setexam2016.in/ என்ற இணையதளத்தில், 'ஆன்லைன்' மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்