சனி, 2 ஜனவரி, 2016

TRB PG TAMIL /TNPSC :என்ன?எது ?

1. குமரியில் உள்ள வள்ளுவர் சிலையின் உயரம் என்ன ? --133அடி
2. சிற்றதிகாரம் என்று அழைக்கப்படும் நூல் எது ? ---நன்னூல்.
3. "அண்ணலும் நோக்கினாள், அவளும் நோக்கினாள்" வரி இடம்பெற்ற நூல் எது ? --கம்பராமாயணம். 4. பண்ணுடன் பாடப்பட்ட எட்டுத்தொகை நூல் எது ? --பரிபாடல்.
5. தமிழர்களின் வரலாற்றுக் களஞ்சியமாக விளங்கும் பழந்தமிழ் நூல் எது ? --புறநானூறு.
6. "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று கூறியவர் யார் ? ---திருமூலர்
7. "சாதி இரண்டொழிய வேறில்லை" என்ற வரிகள் யாருடையவை ? --ஔவையார்
8. "சாம்போதும் தமிழ்படித்துச் சாதல்வேண்டும்" என்றவர் யார் ? --இலங்கைக் கவிஞர் சச்சிதானந்தன். 9. தமிழில் தோன்றிய முதல் சிறுகதை எது ? --குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை (வ.வே.சுப்பிரமணியர்)
10. கண்ணதாசன் எழுதி சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல் எது ? --சேரமான் காதலி.
11. "தீ இனிது" என்று பாடிய கவிஞர் யார் ? --பாரதியின் வசனகவிதை
12. "புத்தகங்களே குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள்" என்ற கவிஞர் யார் ? --அப்துல் ரகுமான்.
13. "முகத்தில் பிறப்பதுண்டோ முட்டாளே" என்ற கவிஞர் யார் ? --பாரதிதாசன்.
14. ஜெயகாந்தனின் எந்தச் சிறுகதை பின்னர் நாவலாக வளர்ந்தது ? --அக்னிப்பிரவேசம்.
15. 'பள்ளிக்கூடம் இல்லாத ஊரில் படிக்கப்போறேன்" என்றவர் யார்? --பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
16. தன் மனைவியை இறைவனுக்காக விட்டுக்கொடுத்த நாயனார் யார் ? --இயற்பகை நாயனார்.
17. கடவுளும் கந்தசாமியும் – சிறுகதை ஆசிரியர் யார் ? --புதுமைப்பித்தன்
18. கலப்புத் திருமணத்தைக் கருவாகக் கொண்ட அண்ணாவின் நாவல் எது ? --குமரிக்கோட்டம்
19. திருநீலகண்ட நாயனார் கீர்த்தனை இயற்றியவர் யார் ? --கோபாலகிருஷ்ண பாரதி
20. பண்ணாய்வான் பசு எனப் புகழப்படும் இசைத்தமிழறிஞர் யார் ? --குடந்தை ப.சுந்தரேசனார்.
21 "இருபத்துநாலாயிரம் நபிகளில் ஒரு பெண்நபிகூட இல்லையே ? ஏன் வாப்பா" – யார் எழுதிய கவிதை? --எச்.ஜி.ரசூல்
23. "காவிய காலம்" என்ற ஆய்வு நூலை எழுதியவர் யார் ? --வையாபுரியார்.
24. "புதுக்கவிதை –சொற்கள் கொண்டாடும் சுதந்திரதின விழா" –என்றவர் யார்? --வைரமுத்து
25. "இரவில் வாங்கினோம், விடியவே இல்லை" –என்ற கவிஞர் யார்? --சேலம் ம.அரங்கநாதன்

மேலும் சில, "உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ"என்று கூறியவர் யார்?
பட்டினத்தார்
"இன்னாதம்ம இவ்வுலகம் இனிய காண்க அதன் இயல்புணர்ந்தோரே" பாடிய புலவர் யார்? பக்குடுக்கை நன்கணியார்
("உண்டாலம்ம இவ்வுலகம்" கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி)
"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" வரிகள் இடம் பெற்ற நூல்கள்
புறநானூறு, மணிமேகலை
தமிழில் விருத்தப்பாவில் எழுந்த முதல் காப்பியம்? சீவகசிந்தாமணி
ஐம்பெரும்காப்பியம் எனும் வழக்கை முதலில் கையாண்டவர்? மயிலை நாதர்
" யான் பெற்ற பெரு பெருக இவ்வையகம்", "என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே" எனக்கூறியவர்?
திருமூலர்
"தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா" என்றவர்
நாமக்கல் கவிஞர்
"இப்படை தோற்கின் எப்படை வெல்லும்" வரி இடம்பெறும் நூல்?
மனோன்மணியம்
"காக்கை விடு தூது" நூலாசிரியர் யார்? வெள்ளைவாரணர்