திங்கள், 11 ஜனவரி, 2016

திருவள்ளுவர் ஓவியத்தில், திருக்குறள்கள் இளம் பெண் சாதனை

திருவள்ளுவர் ஓவியத்தில், திருக்குறள்கள் அனைத்தையும் தலைகீழாக எழுதி இளம் பெண்சாதனை படைத்துள்ளார்.
கோவை மாவட்டம், ஆலாந்துறையை சேர்ந்த சுப்பிரமணியம்-லதா தம்பதியர் மகள் ஹரிபிரியங்கா, 24. பேஷன் டெக்னாலஜி படிப்பை முடித்து, கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று கரூர் தான்தோன்றிமலையில் நடந்த, ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட் நிறுவன விழாவில், திருவள்ளுவரை ஓவியமாக வரைந்து அதில், 1,330 திருக்குறள்களை தலை கீழாக எழுதியதற்காக, பரிசுகள் வழங்கப்பட்டது. இதுகுறித்து, ஹரி பிரியங்கா கூறுகையில், ''முதலில் பேப்பரில் திருக்குறள் களை தலைகீழாக எழுதி பழகினேன். பிறகு, திருவள்ளுவர் ஓவியம் வரைந்து, அதில், 1,330 திருக்குறள்களை தலைகீழாக எழுதியுள்ளேன். ஓவியம் வரைய மூன்று நாட்களும், திருக்குறள்களை தலைகீழாக எழுத மூன்று நாட்களும் ஆனது. தொடர்ந்து பல்வேறு ஓவியங்களை வரைந்து, திருக்குறள்களை எழுத திட்டமிட்டு வருகிறேன்'' என்றார்