செவ்வாய், 1 ஏப்ரல், 2014

பிளஸ் 2 :கீ - ஆன்சர்' தயாரிக்க நான்கு குழுக்கள்

விடைத்தாள்களை திருத்துவதற்கு, பாட வல்லுனர் குழு, சரியானவிடைகளை (கீ - ஆன்சர்) தயார்செய்தன.இந்த விடைகளின் அடிப்படையில் தான், ஆசிரியர்,விடைத்தாள்களை திருத்துவர்.

வழக்கமாக, ஒவ்வொரு பாடத்திலும், ஒரு குழு தான், "கீ - ஆன்சரை' தயாரிக்கும்.ஆனால், இந்த முறை, ஒவ்வொரு பாடத்திற்கும், நான்கு குழுக்களை அமைத்து, ஒவ்வொரு குழுக்களிடமும்,தனித்தனியாக, "கீ - ஆன்சரை' பெற்று, நான்கையும் ஒப்பிட்டு, அதில், ஒரே விடைகளைக் கொண்டவை மட்டும்தேர்வு செய்யப்படுகின்றன. வேறுபாடு வந்தால், அதற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்து, இறுதி முடிவு எடுத்தபின், "கீ - ஆன்சர்' இறுதி செய்யப்படுகிறது.
இதனால், தேர்வு முடிவிற்குப்பின் வரக்கூடிய பிரச்னைகள் குறையும் என்றும், குறிப்பாக,
மறுமதிப்பீடு கோரி, அதிக மாணவர், விண்ணப்பிக்க மாட்டர்கள் என்றும், தேர்வுத்துறை வட்டாரம்தெரிவிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக