ஞாயிறு, 29 டிசம்பர், 2013

 தமிழகத்தைச் சேர்ந்த, 10 அதிகாரிகளுக்கு,ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து


 தமிழகத்தைச் சேர்ந்த, 10 அதிகாரிகளுக்கு,ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது. இந்திய ஆட்சிப் பணிக்கு, காலியாக உள்ள இடங்களை நிரப்ப, மாநில அரசுப் பணியில் உள்ள அதிகாரிகள், தேர்வு செய்யப்படும் நடைமுறையின்படி, தமிழக அரசுப் பணிகளில் உள்ள, தகுதி வாய்ந்த அதிகாரிகள், 2012, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்தேர்வு பட்டியலில் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு தமிழ்நாடு பிரிவு ஒதுக்க வேண்டும் என,ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
 அதன்படி, நாமக்கல் மாவட்டம், மோகனம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தனி அதிகாரி மலர்விழி,தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ்குமார்,கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அலுவலர் பழனிச்சாமி, கோவை மாவட்ட, நுகர்பொருள் வாணிபக் கிடங்கு,
முதுநிலை மண்டல அதிகாரி பிரபாகரன்,சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் லட்சுமி, ஆவின் இணை நிர்வாக இயக்குனர் கஜலட்சுமி, சென்னை மண்டல, "டாஸ்மாக்' முதுநிலை மேலாளர் கந்தசாமி, ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ், சேலம் ஆவின் தனி அதிகாரி கதிரவன், முதல்வர் தனிப்பிரிவு அலுவலக அதிகாரி இன்னசென்ட்
திவ்யா ஆகியோர், ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து பெற்றுள்ளனர்."ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெறாமல், மாநில அரசு அதிகாரிகளாக பணிபுரிந்து, ஐ.ஏ.எஸ்.,அந்தஸ்து பெற விரும்புவோருக்கு, தேர்வு நடத்தப்படும். தேர்ச்சி பெறுவோருக்கு மட்டும்,ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து வழங்கப்படும்' என, மத்தியஅரசு அறிவித்துள்ளது. ஆனால், இப்புதிய அறிவிப்பு,எந்த ஆண்டில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும் என,அறிவிக்கப்படவில்லை. எனவே, தற்போது, ஐ.ஏ.எஸ்.,
அந்தஸ்து பெற்ற, 10 அதிகாரிகளும், தேர்வு இல்லாமல், ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து பெற்று விட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக