வெள்ளி, 27 டிசம்பர், 2013

பள்ளிக் கல்வித்துறையில்  பின்னடைவு காலியிடங்களுக்கு  பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமனம்


பள்ளிக் கல்வித்துறையில் 136 பின்னடைவு காலியிடங்களுக்கு (பேக்-லாக் வேகன்சி) பட்டதாரி ஆசிரியர்களை நியமித்து ஆசிரியர் தேர்வு வாரியம் நேரடியாக உத்தரவு அனுப்பியுள்ளது. இந்தப் பணியில் சேருபவர்கள், 5 ஆண்டுகளுக்குள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் எனவும் கெடு விதித்துள்ளது. 

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி களில் கடந்த 2008-09ம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு (சீனியாரிட்டி) அடிப்படை யில் சுமார் 6 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதற்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஒரு காலியிடத்துக்கு 5 பேர் என்ற வகையில் 30 ஆயிரத்துக்கும் மேற் பட்ட பதிவுதாரர்கள் அழைக்கப் பட்டிருந்தனர். 

இந்நிலையில், 136 பின்னடைவு காலியிடங்களை (பேக்லாக் வேகன்சி) ஏற்கெனவே நடத்தப் பட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்களைக் கொண்டு நிரப்ப அரசு முடிவு செய்தது. ( பின்னடைவு காலியிடங்கள் என்பது இடஒதுக் கீட்டில் தகுதியான நபர்கள் கிடைக் காவிட்டால் தொடர்ந்து காலியாக வைக்கப்பட்டிருக்கும் இடங்கள்).

136 பேருக்கு பணி உத்தரவு
அதைத்தொடர்ந்து, 2008-09ம் ஆண்டு நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர் களில் 136 பேரை பின்னடைவு காலிப் பணியிடங்களுக்கு தேர்வு செய்து அவர்களுக்கு பணி நியமன உத்தரவை ஆசிரியர் தேர்வு வாரியம் நேரடியாக அனுப்பியுள்ளது. 

குறிப்பிட்ட பள்ளியை ஒதுக்கீடு செய்து அனுப்பப்பட்டுள்ள இந்த உத்தரவில், அரையாண்டுத் தேர்வு முடிந்து பள்ளி திறக்கும் நாளான ஜனவரி 2-ம் தேதி அன்று பணியில் சேருமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. 

5 ஆண்டு அவகாசம்
இந்தப் பணியில் சேருபவர்கள், 5 ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் எனவும் அந்த உத்தர வில் காலக்கெடு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. 

எதிர்பாராத நேரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் இருந்து திடீரென நேரடியாக பணி உத்தரவு வந்திருப்பதால் பட்டதாரி ஆசிரியர்கள் பலர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 

இதேபோல், ஏற்கனவே நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் 3,500 இடைநிலை ஆசிரியர் களுக்கு நேரடியாக பணி உத்தரவு வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக