இலங்கை போர் இலங்கையில் நடந்த உச்சக்கட்ட போரில் அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதை கண்டித்து சென்னை ஐகோர்ட்டில், வக்கீல்கள் கடந்த 2009–ம் ஆண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வழக்கு விசாரணைக்கு வந்த சுப்பிரமணியசாமி மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து ஐகோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதேநேரம், சுப்பிரமணியசாமி மீது போலீசில் புகார் செய்ய, 2009–ம் ஆண்டு பிப்ரவரி 19–ந்தேதி சில வக்கீல்கள் ஐகோர்ட்டு வளாகத்தில் அப்போது இருந்த போலீஸ் நிலையத்துக்கு சென்றனர்.
, ஐகோர்ட்டில் இருந்த வக்கீல்கள், நீதிபதிகள் உட்பட பலர் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். இந்த சம்பவத்தை கண்டித்து ஒவ்வொரு ஆண்டும், பிப்ரவரி 19– ந்தேதி கோர்ட்டை புறக்கணித்து, கறுப்பு தினமாக வக்கீல்கள் அனுசரித்து வருகின்றனர். இந்த ஆண்டும், புதன்கிழமை (இன்று) கறுப்பு தினமாக அனுசரித்து, கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் தலைமையில் அவசர பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. அந்த கூட்டத்தில், ''வக்கீல்கள் மீது தடியடியை நடத்திய, அப்போதைய சென்னை போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன், கூடுதல் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், இணை கமிஷனர் ராமசுப்பிரமணி, துணை கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா ஆகியோரை ஐகோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி, தமிழக அரசு இடைநீக்கம் செய்யவேண்டும். ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள அப்பீல் மனுவை தமிழக அரசு வாபஸ் பெறவேண்டும். இவற்றை வலியுறுத்தியும், வக்கீல்கள் மீது தடியடி நடத்திய சம்பவத்தை கண்டித்தும் பிப்ரவரி 19–ந்தேதி (இன்று) அனைத்து கோர்ட்டுகளையும் வக்கீல்கள் புறக்கணிக்க வேண்டும்'' என்று தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.
அதேபோல, பெண் வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் டி.பிரசன்னா தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், இன்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவேண்டும் என்று தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக