புதன், 19 பிப்ரவரி, 2014

முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 50 புதிய சிற்றுந்துகள், 185 புதிய பேருந்துகள் மற்றும் 109 புனரமைக்கப்பட்ட பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்

ஒரு மாநிலத்தின் முன்னேற்றத்தில் போக்குவரத்து சேவை முக்கியபங்கு வகிக்கிறது. மாநிலத்தில் பெருகி வரும் மக்கள்தொகைக்கேற்ப,கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்கள் விரிவடைந்து வருகின்றன.பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அரசு புதிய பேருந்துகள் மற்றும் புதிய வழித்தடங்களை அறிமுகம்செய்து வருகிறது.
அந்த வகையில், சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை மாநகர மக்களின் தேவையை நிறைவு செய்யும் வகையில் போக்குவரத்து இணைப்பில்லா பகுதிகளிலிருந்து அருகிலுள்ளபேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் 7கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 50 புதிய சிற்றுந்துகள்; 8கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 109 புனரமைக்கப்பட்ட பேருந்துகள்; மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் 8 பேருந்துகள்;விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 51 பேருந்துகள்; சேலம்அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 16 பேருந்துகள்; கோயம்புத்தூர்அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 17 பேருந்துகள்; கும்பகோணம்
அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 51 பு ய பேருந்துகள்;மதுரை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 33 பேருந்துகள்; திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 9 பேருந்துகள், என 35கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 185 புதிய பேருந்துகள்; எனமொத்தம் 50 சிற்றுந்துகள், 185 புதிய பேருந்துகள் மற்றும் 109 புனரமைக்கப்பட்ட பேருந்துகளை முதல்வர்ஜெயலலிதா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பேருந்துகளின் எண்ணிக்கைக்கேற்ப, போக்குவரத்துக் கழகங்களின் பணிமனைகளின் எண்ணிக்கையையும் உயர்த்தும் நோக்கில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் பெசன்ட் நகரில் 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் ஆதம்பாக்கத்தில் 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்; விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் நெய்வேலியில் 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் ஓரிக்கையில் 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்; கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஆலங்குடியில் 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் அரவக்குறிச்சியில் 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்; மதுரை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிவகாசியில் 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்; என 5 கோடியே 57 லட்சம் ரூபாய்மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஏழு புதிய பணிமனைகளை முதல்வர் இன்று திறந்து வைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக